அழுகை ........
உதடுகளை அடக்கி
மவுனம் காத்திட்ட என்னால் ......
உணர்வுகளை அடக்க முடியாத போது
பொங்கி வரும் ஊமை(ஊற்று ) பெருக்கு....
இரு கைகளை முகத்தில்
புதைத்து கதறினாலும் ....
இமைகள் திறக்காது
இருக்க மூடினாலும்.......
சலனமின்றி சன்சரிக்கும்
உதிரத்துளிகள் ......
காயங்கள் இன்றி கரைந்தோடும்
ரத்தங்கள் .....
உணர்ச்சி மின்னலாய் அடிக்க ....
உணர்வு இடியாய் இடி இடிக்க ....
வரண்ட முகத்தில் திரண்டிடும்
இருவழி நீர் .....இந்த இருவிழி நீர் !
நம் வலிகளின் கணங்கள் ....
வழிந்திடும் துளிகள் ரணங்களாய் .....
நாம் பிறக்கும் போதே பேசிய
கற்றுக்கொள்ளாத முதல் பாஷை .....
உடலில் அடித்தாலும் .......
உள்ளத்தில் அடித்தாலும் .....
கதறும் வலியின்
முதல் வெளிப்பாடு ....
வானிலை எச்சரிக்கை
மழை பெய்ய அறிகுறி ....
நான் எத்தனை எச்சரித்தாலும்
என்னை மீறி ,எல்லை மீறிடும் ....
அழுகை ஓர்....
அடங்காப் பிடாரி......
அழுகை ....
அமைதியின் வன்முறை ....
வன்முறையின் அமைதி .....
அழுகை ....
மறைக்க முடியாத இம்சை ..
அழுகை .....
தடுக்க முடியாத தண்டனை ...
தவிர்க்க முடியாத சிந்தனை ....
அழுகை ...
எல்லோரிடத்தும் இருக்கும்
எழுத்துவடிவம் இல்லாத மொழி .....
அழுகை ....
ஒவ்வோர் மனிதனின் மனதின்
தேசிய மொழி ......
அழுகை ......
சிறந்த மொழிகளின் பட்டியலில்
முதலிடம் தரவேண்டிய
முக்கிய மொழி ....
மனிதனின் மூல மொழி .....
அழுகை ......
வெறுத்தாலும் வந்திடும்
தடுக்க முடியா இறையின் சாபம் .......
அழுகை .....
விரும்பும் போது அரும்பி நிற்கும்
கடவுளின் பாசம் ......
அழுகை ......
சில நேரங்களில் ஆனந்தமாய் ..
என்னைப் போன்றவர்களுடன்
பல நேரங்களில் , ஆதங்கமாய் ........
வாழ்ந்து கொண்டிருக்கிறது
எங்களின் உதிரங்கலாய் .......

