இலக்கியத்தேவனே என்னைமன்னித்து விடுங்கள்!
ஊன
விழிகளைக்கொண்டு
ஈனக்கருவரையில்
ஈ மொய்த்து விழுந்த
ஈனப்பிறவியொ
நான்!!
சரித்திரத்தில்
சாகாத புத்தகங்களை
நான்
எரித்திட பார்த்தேனோ!
எரித்திடத்தான்
எள்ளளவும்
என்னால் நினைத்திட
முடியுமா!
நினைத்தாலும்
எரித்திட புடியுமோ!
மயானச்சுடர் கொண்டு
மற்றவரை நான்
சுட்டுவிட்டேனோ!
அய்யோ!அய்யோ!
எரியாத என்புத்தகத்தை
எரிக்காமல்
வைத்திருந்தால்அது
என்னை
எரித்துவிடுமோ!
புத்துகத்தின் பீதும்
பலிபோடும்
புதுபித்தனோ!
மயானமே!என்னை
இழுக்காதே!
என்னை இழுக்காதே!
ஆணவச்சுடுகாட்டில்,
அரைப்பிண
வார்த்தைகளை,
அடுக்கிவைத்து
அடுத்தவரை
எரிப்பவனா நீ!
இலக்கியதேவனை
இழிவுபடுத்தியவனா!
இழிவுபடுத்திவிட்டு
இலக்கியம்
தேடுபவனா நீ?
உன் அழிவுக்கு
ஆயத்தமாகி விடு!
எடுத்துஎரிக்க
ஆளில்லையென,
அழைப்புக்கு
வந்துள்ளது
உன்உடல்!
அழிவுக்கு ஆயத்தமாகிவிடு! செருப்புக்கும்ஆகாத
உறுப்பு எதற்கு
உனக்கு?
உன் பிரேதத்தை
தூக்கி
கொண்டுபோனால்,
உன் கொட்டம்அடங்காது!
சிலுவையில் உன்னை
அறைந்து,
கொண்டுபோவதற்கு நீ தேவன்இல்லை!
செருக்குகொண்ட உனக்கு,
வஞ்சகத்தகனமே
வழிசொல்லும்!
அப்படியேன்றால்
என்னவென்றுதெரியுமா!
நிலத்தின்
மேல்புறத்திலே,
உன்ஆடைகள்
உருவப்பட்டு
நிர்வாணமாய்
நிர்பந்தம்
செய்யப்படுவாய்!
உன் சரீரத்தின்மீது
வஞ்சகப்புழுக்கள்
கலவிகொள்ளும்!
உன்விழிகளில்
மண்புழுக்கள்
நுழைந்துகொண்டு
முகுளத்தைதின்று
கொண்டிருக்கும்!
புவியின்மேற்பரப்பில்
உன் புறமுதுகு
புறவிப்பிணம்போல்
கிடக்கும்!
உன் விந்தணுவை
கவ்விக்கொண்டுபோய்
நரிகள்
நச்சுத்திங்கும்!
அகந்தைக்கவிஞனே!
ஆட்டுமந்தை
கூட்டத்தோடுகூட
உன்னைசேர்த்துவிட
முடியும் என்றால்
விண்ணப்பங்கள்
வரட்டும்!
ஆத்திரத்தோடு
ஆக்கியபுத்தகத்தில்,
சூத்திரங்கள்
சுவையில்லை!
ஏன் இந்தஆணவம் உனக்கு?
உலக்குஅரிசியில்,
ஒருஅரிசிகூட
உன் வாய்க்கரிசியில்
சேராது!
இலக்கியத்தேவர்களின்
படைப்புகளை,
ஈனப்பார்வையுடன்
பார்க்கிறதோ
உன்விழிகள்!
ஊன
விழிகளைக்கொண்டு
ஈனக்கருவரையில்
ஈ மொய்த்து விழுந்த
ஈனப்பிறவியோ நீ!
உன்னால் உன்
தாயின்பையும்,
தண்டனைபெறுவதா?
உனக்கெல்லாம் எதற்கு
ஈமக்கிரியை?
தன்மானம்
கெட்டுவிட்டதென்று
வெட்கி
தலைகுனிகிறாயா?
ஆழ்ந்தசிந்தனைக்கு
உன்னை
அழைத்துச்சென்று
மயானத்தை
சிறைபிடுக்கிறாயா?
உலக்கை கவிஞனே!
வலக்கைபேனா
தலைக்கையில்
பணிந்து போ!
இலக்கியப்பசியில்
இரும்புக்குடல்
ஓயவில்லை! அந்த
இலக்கியததேவனை
பார்த்து,
பல்துலக்கி விட்டீரோ
என்று
பச்சைஉடல் கருக
கேட்டாயே,
நீ சிறுமைக்கவிஞனே!
உன்,
மார்பைதட்டிக்கொண்டு
மன்னிப்புகேட்பாயோ!
மார்பில் அடித்துக்கொண்டு,
அய்யோ!அய்யோ!
என
மன்னிப்பு கேட்பாயோ!
அழுவதுபோல்,
முதலைமுட்டைக்குள்
கண்ணீர் வடிப்பாயோ!
ஒருகையை
ஒடித்துக்கொண்டு
ஒருமுறை துடிப்பாயோ!
மறுகையை
மறைத்துவைத்து
ஒய்யாரமாய்
நடிப்பாயோ!
ஈனப்பிறவி என்று
சொன்னதால்
ஊனம்பட்டுபோவாயோ!
உடல்உறுப்பு
தானம்செய்ய
ஊரப்பக்கம்
போவாயோ!
நோன்பு இருப்பதாய்
நொடிப்பொழுதேல்லாம்
தின்று
கொண்டிருப்பாயோ!
வீம்பு பேசிக்கொண்டு
விமர்சனத்தை
மென்று
கொண்டிருப்பாயோ!
திருடிய கவிதைகளை
தேசிய விருதுக்கு
அனுப்புவாயோ!
விருதுகிடைக்காததால்
ஜோசியம்
பார்க்க போவாயொ!
காந்தியைப்பார்த்து
கவிதைஎழுத
சொன்னால்,
அவருக்கு சட்டை
இல்லையேன,
கேலிக்கதை
எழுதுவாயோ!
மன்னிப்புகேட்க
சொன்னால்,
பொதுமன்னிப்பு
கொடுப்பாயோ!
அகந்தைக்கவிஞனே!
அய்யோ!அய்யோ!
அய்யோ!
என்னை
வார்த்தையால்
வதைத்தது போதும்
இலக்கிய தேவனே!
என்னை
மன்னித்துவிடுங்கள்!
என்னை
மன்னித்துவிடுங்கள்!
என் ஆத்மமோட்சமே
என்னை
மன்னித்து விடுங்கள்!

