இறைவா... உன்னால் முடியாது..!!!

எத்தனை சோதனை
எத்தனை வேதனை
அத்தனையும் தாங்கி
அழுகை மறந்தோம்
இன்னும் ஏன்
இரக்கம் இல்லை...!
ஆணவம் உனக்கிருந்தால்
அடித்து சொல்கிறோம்
அடிகள் வாங்கினாலும்
ஜெயிப்பது நாங்களே...
ஏனெனில்
எங்கள் மனம்
வலிகளை தாங்கி
வலிமை ஆகிவிட்டது
இனி அதை உடைக்க
இறைவா உன்னால்
முடியாது...
முயற்சி செய்து தோற்காதே...!!!