கவியாரசனுக்கு ஒரு தாலாட்டு !
கண்ணதாசனே ....
நவீனக் கம்பனே ..!
பொருளறியாமல் இசைக்கு
தலையாட்டிய பாமரக்கூட்டத்தை..
உன் கவியால் கவர்ந்தவனே ...!
நீ கண்ணனின் தாசனே ....
தமிழ்த் திரையுலகில் ...
நீ சாதித்தது சரித்தரச் சாதனை ...
இனி அதையாரும் அசைக்கமுடியாது ..
அதுதான் தமிழின் வெற்றிச் சாதனை...!
உன்சாயலில்லாத பாடலாசிரியரை ..
உலகம் இனியும் காணுமோ ...
நீ பாடிவைக்காத நிகழ்வுண்டோ ..
நிச்சியமாய் இதுவரை
அப்படியேதும் நிகழவில்லை!
காதலில் நீ ...
காதலும் காதல்கொள்ளும்படி...பூப்பாய் ..!
சோகத்தில் நீ ...
சோகமும் குமறிஅழும்படி ...
கண்ணீரில் கரைப்பாய் ...!
தத்துவத்தில் தனித்துவமாய் ..
காதலில் கவித்துவமாய் ...
மோகத்தில் முற்றும் துறந்த முனிவனையும் . .
ஒருக்கணம் சலனப்பட ..
நீ சங்கீதச் சரசமாடுவாய் ...!
நீ காற்றில் கரைத்த கானங்கள் ...
தமிழ் உலகின் அழியாக் காவியங்கள் ...!
உன் புகழ் பாடாத பட்டிமன்றமும் இல்லை ..
உன் பாடல் ஒலிக்காத மக்கள் மன்றமும் இல்லை ..!
நீ மலர்ந்த ..நன்னாளில் ..
கொஞ்சும் தமிழோடும் ...
விஞ்சும் உன் கவியோடும் ...
உன்னை வாழ்த்தும் ...
உன் ரசிகனின் ..குழந்தைத் தாலாட்டு .... !
நிம்மதியாய் நீ கண்ணுறங்கு ..
உன் கவிதைகள் ...
இந்த உலகில் கணநேரமும் கண்ணயர்வதில்லை..!

