என் மகளுக்கு பிறந்த நாள்

வரங்கள் கேட்காமலே....
உன்னை மகளாய் ( வரனாய் ) பெற்றேனே
உன்னை நான் காணும் முன்னே..
எனக்கொரு உலகம் இல்லை..
உன்னை கண்டு கொண்ட பின்...
உன் இவ்வுலகம் பெரிது இல்லை..
நீ முதலில் பேசிய வார்த்தை
முதலில் நடந்த நடை
முதலில் வாங்கிய பரிசு
உன்னை பற்றிய முதல் கம்ப்ளைன்ட் உன்னுடய ஆசிரியர் இடம் இருந்து
எல்லாம் இன்னும் என்
கண் முன்னே நிற்கிறது
சொல்ல வார்த்தைகள் இல்லை
நீ நகரில் நடக்கும் அழகை காண
கண் கோடி வேண்டும்
வெற்றிகள் நிறைய கிட்டும்
தன்னம்பிக்கை வாழ்க்கையில்
முன்னெற்றம் கிடைக்கும்
தாயின் பேச்சை கேட்டு
நல்ல குழந்தையாக நடந்து கொள்
என் மகளே
முறையூர் ஆறுமுகம் திருப்பதி

எழுதியவர் : முறையூர் ஆறுமுகம் திருப் (4-Jul-12, 6:04 pm)
பார்வை : 13299

மேலே