உனக்கென்ன கடவுளே

உனக்கென்ன கடவுளே
உழைக்காமல் சோறு
ஒழுகாத வீடு
ஓலை குடிசை இங்கே
ஒரு வேலை உணவும் எங்கே

உனக்கென்ன கடவுளே
கண்களிலே தங்க கண்மலர்
கை கால்களுக்கோ தங்க செருப்பு
கண்ணில்லா குருடனாய் இங்கே
என் கை கால்கள் எங்கே

உனக்கென்ன கடவுளே
அழியாத அக்காள்தங்கை
வரம் தரும் தாய் தந்தை
தாலி அறுத்த தங்கை இங்கே
மணமான மாங்கல்யம் எங்கே

உனக்கென்ன கடவுளே
காட்சி தரும் வேலை
கோடி கோடியாய் கொடை தரும் மக்கள்
என்னை காண்பாறில்லை இங்கே
நான் கேட்ட கொடை எங்கே

பசி இல்லாத வயறு
பணம் இல்லாத கல்வி
எல்லை இல்லாத நாடு
வேஷம் இல்லாத மனிதர்கள்
மேலும்
வேண்டாம் வேண்டாம் என்றாலும் அன்பை தரும் அண்டை நாட்டுக்காரன்

எழுதியவர் : Jagadeeshwaran (4-Jul-12, 6:38 pm)
Tanglish : unakena kadavule
பார்வை : 424

மேலே