என்னைப்பற்றி இன்னும் என்ன சொல்ல.? பொள்ளாச்சி அபி

ஒற்றை வார்த்தையில்
உன் உள்ளம் கொய்திட
வித்தைகளேதும் கற்றவனில்லை நான்.

எதுகையும் மோனையும்
இணைந்து உலவிடச் செல்லும்
இன்சொல் கவிதை படைப்பவனில்லை நான்.

இல்லை பொருளென
எவர் வந்து கேட்டாலும்
எடுத்து வழங்கிட வாய்ப்புள்ளவனில்லை நான்.

கனவும் நனவும்
ஒன்றென எண்ணி நாட்களை
வீணாய் கழிப்பதை விரும்புபவனில்லை நான்.

எனக்குள் இருக்கும்
இன்னொரு மனிதனை உன்னுள்
எப்போதும் ஏற்கத் திணிப்பவனில்லை நான்.

உழைப்புக்கும் ஓய்வுக்கும்
இடம் கொடச் சொன்னால்
ஓய்வுக்கு முதலிடம் அளிப்பவனில்லை நான்

அது தவிர
எனக்கொன்றும் எப்போதும் தெரியாது
நண்பா..இப்போதுமதனை மாற்றவிரும்பாதவனே நான்.!

என்னைப் பற்றி
இன்னும் என்ன சொல்ல.?
திணறுமந்த பாரவண்டியை தள்ளிவிட்டு வருகிறேன்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி b +ve (4-Jul-12, 8:45 pm)
பார்வை : 333

மேலே