வார்த்தைகள்....

"மாட்டுத்தாவணி போகணும் எம்புட்டு"
என்ற கனத்த குரலை கேட்டதும் பதறி அடித்து கண்விழித்தான் கதிரவன்.அவன் ஆழ்ந்த சிந்தனயில் தன் மூத்த மகள் சடங்கிற்கு மொய்ப்பணம் எவ்வளவு வரும் என்று உறவினர்களின் பெயரை பட்டியல் போட்டுகொண்டிருந்தான் மனதில்;

"ஏம்பா நாம்பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன் ஓம்பாட்டுக்கு ஓரங்குற" என்றார் மீசையை தடவியபடி அந்தநபர்.சுதாரித்த கதிரவன் "எழுவது கொடு பெருசு" என்றான்."ஹ்ம்ம் வண்டியஎடு"என்றார் அவர்.

வண்டி சிம்மக்கல் அருகே வந்திருக்கும்;சிரித்துகொன்டே கதிரவன் முந்தைய இரவு "காதரி"உடன் இருந்ததை சிந்தனை செய்துகொண்டான்.அவளுக்கு மட்டும் தான் போல நூறு ஆயுசு; அழைத்தாள் கதிரவனின் அலைபேசிக்கு. என்ன புன்னகை கதிரவனுக்கு விலைமாது காதரியுடன் பேசலாம் என்றதும்.அவளது இதழ் சிரிக்கும் பேச்சில் இடப்பக்கம் இருந்த லாரியை முந்த முயன்றான்.
அந்தோ பரிதாபம்;
கதிரவன் வானில் நம்மை பார்த்துகொண்டிருந்த போது கதிரவன் உயிர் பிரிய தொடங்கியது.
அங்கே இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து பதறும் போது அவன் செல்போன் பேசியதை பார்த்தபடியே வந்த தந்தை முன் அமர்ந்த குழந்தை மட்டுமே அவன் ஆட்டோவை நோக்கியது.

ஆட்டோவின் பின்
"செல்போன் பேசிகொண்டே வாகனம் ஓட்டாதீர் "

வார்த்தைகள் வாகனத்தில் மட்டும் இருந்தால் இப்படிதான் போலும் .....

எழுதியவர் : senthu (5-Jul-12, 4:04 pm)
பார்வை : 548

மேலே