ஒரு தோழன் ஒரு தோழி..!!
எனக்கான ஒரு தோழி நீ
உனக்கான ஒரு தோழன் நான்
நம்முள் வளரும் நட்பால்
நம்மை சுற்றிலும் வளருது நட்பு
நம்மால் நாளும் பெருகுது நட்பு...
நான் உன்னை தொடும்போதெல்லாம்
நானும் ஒரு பெண்ணாகிறேன்
நீ என்னை தொடும்போதெல்லாம்
நீயும் ஒரு ஆணாகிறாய்
நம் சுகங்கள் அனைத்தும்
எப்போதும் இரட்டிப்பாகும்
நம் சோகங்கள் அனைத்தும்
எப்போதும் பாதியாகும்...
உன் எல்லா அசைவிலும்
எந்தன் கண் இருக்கும்
என் எல்லா செயல்களிலும்
உந்தன் கருத்து இருக்கும்
உன்பார்வைகள் என் செயலாகும்
பல நேரங்களில்
உன்வார்த்தைகள் என் செயலாகும்
சில நேரங்களில்...
நாம் நல்ல காதலர்கள் என்று
சிலர் பேசியதுண்டு
நாம் நல்ல நடிகர்கள் என்று
சிலர் பேசியதுண்டு
நாம் நல்ல திருடர்கள் என்று
சிலர் பேசியதுண்டு
நாம் எப்போதும் நல்ல நண்பர்களென்று
நம் மனதிற்குள் எப்பொழுதும் பேசிக்கொள்கிறோம்..
நாம் விட்டுப்பிரிந்தாலும்
நம்மோடு வருகிறது நட்பு
நம் பிரிவை உதடுகள் சொல்லிக்கொண்டாலும்
நம் சந்திப்பை மனங்கள் சொல்லிக்கொள்ளும்
நட்பே நீதான் என்னை வாழவைக்கிறாய்
நட்பால் மட்டுமே நாம் எல்லோரும் வாழ்கிறோம்
என்றும் உலகில் வாழும் நட்பு
என்றென்றும் நட்பில் வாழும் உலகு..!!

