கவிஞன் வாழ்கிறான்

வான் முதல் மண்வரை
விட்டு விடாமல்
எண்ணங்களைச்
சேகரிப்பவன் !

பால் நிலவைக் கண்டு
எண்ணங்களாலே
மேடை அமைத்து
அதன் வழி அறிந்தவன் !

எண்ணிக் கொண்டிருந்த
நட்சந்திரங்களை
அழகுபடுத்தி சீராட்டி
பாராட்டுபவன்!

மழைத் துளி
மண்ணில் விழுந்த
மழலைக்கு
வானம் வைத்த
வண்ண வண்ண சேலை
வானவில்
என்று சொல்பவன் !

வானம் பாடியை
ஆகாயத்தை அளந்து அளந்து
ரசித்து ருசித்து
மகிழ்ந்து பாடுபவன்!

தன் மொழிக் கீற்றை
அறிவித்து விட்டு
காத்துக் கிடப்பவன்
கவிதை பிரசவத்திற்காக !

எழுதியவர் : செயா ரெத்தினம் (20-Jul-12, 9:55 am)
பார்வை : 369

மேலே