ஜோதி!
ஏங்கி போன காலம் போனதடா தம்பி
காலம் போனதடா!
ஏமாந்த காலம் போனதடா
தம்பி போனதடா!
நேற்று வரை அவர்கள் ராஜ்ஜியமடா
தம்பி அவர்கள் ராஜ்ஜியமடா!
இன்று முதல் நம் ராஜ்ஜியமடா
தம்பி நம் ராஜ்ஜியமடா!
ஏழை அன்று கோழை என்றனர்
இன்று அவனே நாட்டின் தலைவனடா தம்பி தலைவனடா!
ஏழைக்கும் காலம் உண்டு என்பதை மறவாதே மறவாதே
ஏற்றி வைத்த தீபம் ஒளிவீசுதடா
தம்பி ஒளிவீசுதடா!
அதில் எங்கும் ஜோதி மையமாடா
தம்பி ஜோதி மையமாடா.

