சித்தி

நான் தாயாகும் முன்னே
எனக்கு தாய்மையை உணர்தியவனே...
உன்னை பத்து மாதம் கருவில் சுமக்கவில்லை
இனி மொத்த காலம் உயிரில் சுமக்க விரும்புகிறேன் ....
நாளை என் பிள்ளை வந்தாலும்
எனக்கு என்றும் தலைமகன் நீயடா.........
சிறுசிறு சிணுங்களில்
என்னை மயக்கியவனே...
உன் தாமரை இதழ் விரித்து
என்னை சித்தி என்று
அழைக்கும் தருணம்
எப்போதடா.........................

எழுதியவர் : நிலாமதி (10-Aug-12, 1:53 pm)
பார்வை : 8826

மேலே