நாசாவின் எந்திரப் பூச்சி

செவ்வாய் கிரகத்தில்
ஒரு எந்திர பூச்சி
அறிவியலின்
அற்புத புரட்சி
அது செய்யும் ஆய்வு
அழகிய காட்சி
நாசா! நீ
எங்கள் ஜோதிடர்கள்
பிழைப்பை
நாசம் செய்தாயே?
இது நியாயமா?
இனி
இளம் கன்னியர்களின்
கல்யாணக் கனவை
செவ்வாய் தோசமென்று
சீரழிக்கும் ஆருடம்
சொல்லிடக் கூடுமோ?
இனியும் சொன்னால்
இருக்கவே இருக்கு
நாசாவின் கிரயொசிட்டி
தோசத்தைதான் துரத்திடலாமே?
வேசத்தைதான் விரட்டிடலாமே!
ஆனாலும்
நாசாவே! நீ
இருக்க வேண்டும்
இவர்களிடம் ஜாக்கிரதையாக
இல்லையேல்
உன் எந்திர பூச்சிக்கும்
தந்திரம் மந்திரம் செய்து
யாகங்கள் பூஜைகள் செய்து
தன் பக்கம் இழுத்துவிடுவார்...
அப்படித்தான்
செர்ன் ஆய்வகத்தில்
கண்டுபிடித்த சக்தியை
கடவுள் துகள் என்று சொல்லி...
ஆனாலும்
நாசாவே! நீ
இருக்க வேண்டும்
இவர்களிடம் ஜாக்கிரதையாக
ஒரு வேண்டுகோள்-
அங்கே
மனிதர்கள் வாழலாம்
என்று அறிந்தால்
எவரிடமும் சொல்லு....
எங்க நாட்டு
அரசியல் வாதிகளிடம் மட்டும்
அறிவித்து விடாதே!
அத்தனையும் கூறு போட்டு
அழகாய் விற்று விடுவார்கள்!