நிர்வாணா

மலர் நறுமணம் நுகர்ந்து
சுற்றிப் பறக்கும் தேனீக்கள்,
தேன்பருகி தனைமறக்கும்.

வனம் நாற்றமணம் கமழும்
செத்துப்புடைத்த சவமருகில்
சிந்தி வந்துத் தேடாது தேனை.

புழுக்கும் புலால்மணத்தில்
புகுந்து லயிக்கும் ஈக்கள்,
வீசும் நற்ச்சந்தனநறுமணம்
நாடி நிற்க விரும்பாது.

சம்சார சாகரத்தில்
சதிராடும் மனிதனோ,
நிர்வாணா நகரத்தை
நானிக்கூனிக்கூட அறிதலில்லை.

எழுதியவர் : ஓஷோ (16-Aug-12, 5:46 pm)
பார்வை : 167

மேலே