இத்தனை கனவுகளும் என் போர்வைக்குள்

இத்தனை கனவுகளும் என் போர்வைக்குள்...

ஏகந்த வேளையில்
தகிக்கும் இரவுகளின் காமபோர்க்களம்-
மோகம் தாளாமல்
தலையணைப்பிடித்த விரல்கள் நீள மறுக்கும்..
பாதம் உரசிய வெப்பத்தில்
நகங்கள்கூட மோகத் தீயில் கருகும்-
கன்னக்குழியில் கண்ணீர் தேங்கி
உடர்சூட்டில் உடனே காய்ந்து
புடவைத்தலைப்புகள் உப்புக்கரிக்கும்-
உன் உதட்டு சாரலால் அவ்வப்போது
குளிர்ச்சியடையும் என் தீப்பற்க்கள்-
அதனால் வானத்தில் துளிர்த்த நட்சத்திரமாய்-
உன் வியர்வைத்துளிகள்..
இத்தனை கனவுகளும் என் போர்வைக்குள்...


Original source: http://www.eegarai.net/t48435-topic#ixzz23n4JGerk

எழுதியவர் : sivaganga (17-Aug-12, 2:16 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 217

மேலே