கோபம் வந்தா........
கோபம் மனசில் அதிகமா
கொந்தளிச்சு வேகுதடி
காட்டி நானும் பாத்தாக்க
கொடுமைகளா போகுமடி
உலகத்துலே அநியாயம்
நடக்குறதா பெரு மாயம்
கொந்தளிச்சுப் பயனென்ன
கிடைப்பதுவோ மனக்காயம்
வாழும் வழி கத்துக்கணும்
வருவதை நாம ஒத்துக்கணும்
வணங்காத கோபம் நம்ம
வாட்டி வதக்காம பாத்துக்கணும்

