கற்று கொள்

மனிதனாய் பிறந்த நீ கற்றுகொள்
உலகளவு இல்லை முதலில் கையளவு
கூட்டை விட்டு வெளியேறினாலும்
தன பாதை மறவா பறவையிடம் கற்றுகொள்
பாதை மாறாமையை
வேரில் துளி நீர் ஊற்றினாலும்
அதை உச்சி இலை வரை கொண்டு சேர்க்கும்
மரங்களிடம் கற்றுகொள்
உதவும் குணத்தை
வேற்றுமை பாராமல் எல்லோரையும்
குளிர்விக்கும் மழை இடம் கற்றுகொள்
பாரபட்சம் இல்லா அன்பை
எப்போதும் பயணித்து கொண்டு இருக்கும்
மேகத்திடம் கற்றுகொள் உழைக்கும் குணத்தை
தன் வண்ணங்களால் எல்லோரையும் மயக்கி
தன் வாசத்தால் எல்லோரையும் கட்டி இழுத்த
மலரிடம் கற்றுகொள் ஒரு நாள் வாழ்ந்தாலும்
முழுமையாய் வாழ
இப்படி புத்தக அறிவை விட
இயற்கை கற்றுத்தரும் பாடம்
விலைமதிக்க முடியாதது .

எழுதியவர் : ஷெரில் (27-Sep-12, 4:06 pm)
Tanglish : katru kol
பார்வை : 180

மேலே