கணனித் துளிகள் - கே எஸ்.கலை
வியர்க்காமல்
உழைக்கும் தொழிலாளி
கணினி !
•
புலியும்
புல் தின்றது
கிராபிக்ஸ் !
•
தொலைதூர
ஊமைகளையும் இணைத்தது
3ஜி (3G) !
•
விரல்களின்
குரலற்ற பேச்சு
அரட்டை(Chat)
•
ஸ்பரிசங்கள்
இல்லாமல் முத்தங்கள்
ஸ்கைப்(Skype)

