ஆதாம்ஏவாள் பிள்ளை( கி.மு. மொழி)
ஆதாம் ஏவாள்
அர்ப்பணித்த
முதல் ஆள்!
பஞ்ச பூதங்களின்
படை
நடுங்க வைத்த வாள்!
ஜென்மங்களை
சிறை யெடுத்து
சிதையாக்கிய
செந்தசை யாள்!
சிதையின்
செந் தழலை
செதுக்கி
வானில்
திங்களை பதித்தாள்!
செதுக்கி விழுந்த
செதில்களை திரித்து
திங்களின்
புறத்தில்
வெய்யோனை வேய்ந்து
வைத்தாள்!
பூக்களில்
புது யுத்தம்
நடத்துகிறாள்...
சித்தம்
கலங்க கண்ணீர்
சிந்துகிறாள்!
சங்கதி யொன்று
பேசுகையில்
என் சந்ததியின்
செங்கதிர்
செதிலறுந்து
விட்டதோ வென்று
கவிதைச்சிதையில்
விதவையாய்
எரிகிறாள்!
நடை வழியே
நாணம்
பெண்ணிடைக்கு
பெற்றுக்கொடுத்தாள்!
உடை வழியே
ஊனம் அதினால்
கடை விழியின்
மேல்
கருவம் கொய்தாள்!
தன்னுயிர் திரித்து
வலது கையொன்று
தரித்தாள்!
தன்னுதிரம்
காய்ச்சி வடித்து
உயிர்க்குடுவை
யொன்றில்
ஊற்றி வைத்தாள்!
அதன் பெயர்
வள்ளுவ னென்று
வாய் மொழிந்தாள்!
தன் சேய்க்கு
செந்தசைகள்
விழைந்ததாய்
தமிழ்,
தாய் ஆகிறாள்!
சிலம்பொன்று
செத்து மடிகையில்
எரிமலைத்தழும்பை
எடுத்தெறிந்தாள்!
கண்ணகியின்
கருவறையை
தாங்குபவள்
சிதையே
உன்னையும்
சிதைத்திடுவாள்!
சுட்ட
வேம்பின் சுவையாள்
சுவைத்திட்டாள்
நோய்த்தசைகள்
நொடியும் என்பாள்!
அந்தியை
அரைத்து
அரைச்சந்தனம்
திரித்தாள்
முந்தியில் முடிந்து
முழுமதியையும்
மறைத்தாள்!
நவரத்தினங்கள்
நகை யழகு
நகைக்கும் மொழியில்
தமிழ்
மீட்டிசைத்தால்
இன்னும்
மிகை யழகு யென்றெ
உங்களால்
தூங்கிக்கொண்டே
புலம்புகிறாள்!