தேவையில்லை !

எறும்புக்குத்
தேவையில்லை
மெழுகுவர்த்தி வெளிச்சம் !

ஏணிக்குத்
தேவையில்லை
இலக்கின் உயரம் !

வான் மழைக்குத்
தேவையில்லை
வயல்வெளியா
கடல்புறமா
என்கிற பேதம் !

பார்வைக்குத்
தேவையில்லை
பகல் இரவு
நேர மாற்றம் !

மானுக்குத்
தேவையில்லை
மயிலின்
நடனம் !

மக்களுக்குத்
தேவையில்லை
மன்னர் தாங்கும்
மகுடத்தின் பாரம் !

உழைப்பவனுக்குத்
தேவையில்லை
சோம்பேறிகளின்
சூத்திரம் !

ஆம்
இன்றைய
இளைஞனுக்குத்
தேவையில்லை
வெட்டிப் பேச்சு
வீண் ஜம்பம் !

எழுதியவர் : முத்து நாடன் (24-Oct-12, 2:21 pm)
பார்வை : 173

மேலே