உயிர்க் காதல்
இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் காதல் கொள்கின்றன.
தங்கள் இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு அளவு கடந்த நேசம் !
அடிக்கடி பெண்ணுக்கும் ,ஆணுக்கும் பாச சண்டை கூட !
“என்னக்குத்தான் உன்மேல் அதிக காதல் “ என்றது ஆண்.
“இல்லை ... இல்லை ! எனக்குத்தான் அதிக நேசம் “ என்று சொன்னது பெண் .
கடைசியில் இரண்டும் பேசி ஒரு முடிவுக்கு வருகின்றன.
“சரி ... நம் இருவருள் உண்மைக் காதல் யாருக்கு என்று பார்க்கலாம் “ என சபதம் .
அதாவது ,”நாளை மலர இருக்கும் இந்த பூவை , யார் அதிகாலையில் முதலில் பார்க்கிறோமோ ...
அவரே உண்மைக் காதலில் உரியவர் !” என்றன .
அதிகாலை புலர்ந்தது !
ஆண், அந்த மலருக்கு முன்னால் அமர்ந்து காத்திருக்க ... மொட்டு அவிழ்கிறது .
அவிழ்ந்த மொட்டுகள் ,
பெண் இறந்து கிடக்க கண்ட ஆண் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு தன் உயிரை மாய்க்கிறது !