மழை நாட்களில் ...!

தொலைக்காட்சியில் செய்திகளைக்கான
கண்கள் துடிக்கும்

சில ஊர்களும் வீடுகளும்
தீவு ஆகவும் தீபகற்பமாகவும்
நில அமைப்பில் மாறுதலடையும்

சூரியப்பறவையும் சில
கட்டுப்பாட்டுடன் தான் வானில் பறக்கும்

நோய்கள் விருந்தாளிகளாகும்
மருத்துவமனைகள்
மக்கள் கூடும் ஆலயங்களாகும்

கோடையில் வெம்மையால்
சாகடிக்கப்பட்ட வேளாண்மை
நீரில் மூழ்கடித்து சாகடிக்கப்படும்

விழும் இடியில் சில
மரங்களின் வாழ்வில் இனி
விடியல் மறுக்கப்படும்

ஆறுகள் புது உருவம் பெறும்
அதனோரம் வீடுகளின் தடம் அழிக்கப்படும்

மின்வெட்டுக்கு குற்றப்பழி
மழை ஏற்கும்

பள்ளிகளுக்கு விடுமுறை
அரசாணையில் பிறப்பிக்கப்படும்
சில உயிர்களுக்கு நிரந்தர விடுமுறை
இயற்கை ஆணையில் எழுதப்படாத
விதியாய் இருக்கும் ....!

எழுதியவர் : த.மலைமன்னன் (5-Nov-12, 10:17 am)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 170

மேலே