கழிப்பறை
60 வருடங்களுக்கு முன்னால் சாத்தூரில் . விடியகருக்கல்லில் (அதாவது
அதிகாலை )ஐந்து மணிக்கு எழுந்து தலையில் முண்டாசு கட்டி கொண்டு செல்லும் அப்பாவின் பின்னாடி நானும் என் சகோதரனும் ,கருவேலம் பொடியால் பல்லை தேய்த்து கொண்டு கையில் ஒரு சொம்பை தூக்கி கொண்டு செல்வோம் .வைப்பாறு ஆற்று மணலில் நடந்து அக்கறை சென்று சிறு சிறு கருவேல மரங்கள் மறைவில் காலை கடனை முடித்து விட்டு வருவோம் . அந்த நாட்கள் மறக்க முடியாதது . ஒரு பக்கம் தொலைவில் தெரியும் ரயில் பாலம் . மறு பக்கம்
நெல்லை நெடுஞ்சாலை பாலம். எதிரில் விரிந்த ஆற்று மணல் .கையில் கருவேலங் குச்சியால் மணலில் கிளறி கொண்டு எதோ பேசிக்கொண்டு
சுகமான காற்றை அனுபவித்து கொண்டு இயற்கையோடு இணைந்த தருணங்கள்.
பின்னர் வந்த காலங்கள் மோசமானவை . நகர வாழ்க்கை. நரகமாய் மாறியது .
வீட்டுக்குள் கழிப்பறை . பழகுவதற்கு கடினமாய் இருந்தது . ஸ்டோரில் குடியிருந்த பொது நீண்ட வரிசையில் வயற்றை பிடித்து கொண்டு காத்திருந்த
காலங்கள்.பொதுவான கழிப்பறைகள் ஆதலால் சுத்தம் குறைவு .
பின்னர் சொந்த வீடு . இந்தியன் வெஸ்டேர்ன் டைப் என்று ரகங்கள் வேறு !
இப்போது எல்லாம் மாறி விட்டது . அவசர யுகம் . பேப்பர் வராவிட்டால் , toilet
போவது கடினம். பேப்பர் படித்து கொண்டும், பாட்டு கேட்டு கொண்டும்
இருந்த காலம் போய், இப்போது லேப்டாப் ,ipad கையில் எடுத்து கொண்டு
செல்லும் காலம்.உள்ளே போனால் யாரவது செல்போனில் கூப்பிட்டு
வெளியே வர சொன்னால் தான் உண்டு .
என் பேரன் toilet செல்ல கார்டூன் புக் அல்லது கேம்ஸ் வேண்டும் என்கிறான் .
இது ஒரு பக்கம்.
கபில் சிபல் toilets கோயில்களாக வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு ?
குறைந்த பட்சம் toilets சுத்தமாகவும் சுகாதார மாகவும் இருக்க வேண்டாமா ?