விதை துளிராய்...

உன்னத நாட்டில் ஒற்றுமை காக்க
வாழ்க்கை போதிக்கும் புத்தகம் காரணம்
பலவாயிரம்பக்கம் படித்த பின்னும்
முரணாய்ச் சிந்தனை ஒவ்வொருமனதிலும்
தேவை ஒன்றே என்ற போதிலும்
ஒப்பிட்டுச் சாதிக்க சான்றோர் பலரும்
பிறப்பே மகத்துவம் பிறந்தது சத்தியம்
இறந்தபின் கதைகள் செய்யும் கவலைகள்
மானிடவுலகின் குரல்தனைக் காக்க
மாபெரும் குறள் ஒன்று இங்குண்டு
பேதம் நீக்கி இவ்விதை விதைத்தால்
நல்லோரு துளிர் நாளை நிச்சயமே...
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (6-Dec-12, 6:54 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 132

மேலே