ஆசி கொடு அம்மா

தாலாட்டி வளர்த்த தாய்
என்
தளிர்நடை யை ரசித்த தாய்
ஒருநாள் மூச்சடக்கி கொண்டாள் !

வயதின் மூப்பும் வாட்டிய நோயும்
அவள் சிவந்த முகத்தை
சிதைத்து விட்டது !
அனால் இறப்பில்கூட
அவள் முகத்தில் புதைந்து இருந்த
புத்திர பாசத்தை
புரிந்து கொண்டேன் !

என்தாய்
உலகைவிட்டு பிரிய அஞ்சவில்லை !
கைபிடித்த கணவனை விட்டு
அகல கலங்கவில்லை

ஆனால்
ஐம்பது வயதான என்னை
ஐந்துவயது குழந்தையென நினைத்து
மறந்து செல்லவே மனமில்லாமல்
மறித்து போயிருக்கிறாள் !

ஆண்டவனை
நான் அடிபணிந்ததில்லை
மனைவி குழந்தையென
நான் இப்போது மகிழ்வோடு
இருந்தாலும்
உன்பிரிவு
உன்னைப்போல் என்னையும்
பிணமாக ஆக்கியது சத்தியம் தாயே !

மறுபிறவி வேண்டாம்
ஆனால்
நான் மறுபடியும் பிறந்தால்
நீ சேயாக வேண்டும் நான் தாயாக வேண்டும் !
தாய்மையில் தவிப்பை
உன்னைப்போல் நானும்
அப்போது உணர்ந்தாக வேண்டும்
ஆசி கொடு அம்மா!

எழுதியவர் : (9-Dec-12, 6:19 pm)
பார்வை : 136

மேலே