m arun - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : m arun |
இடம் | : tuticorin |
பிறந்த தேதி | : 30-Oct-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 213 |
புள்ளி | : 267 |
i am t v journalist
மழை வருது மழை வருது குடை வேண்டாம் !
-----------------------------------
கொட்டும் மழை கண்டு
குடை பிடிக்க வேண்டாம் தோழர்களே !
வானத்துக்கு வருத்தமாகிவிடும்
எப்போதாவது மனிதன் மகிழ
மழை கொடுத்தால்
கருப்பு குடை பிடித்து
கண்டனம் தெரிவிகிறானே ?
வாடட்டும் வறட்சியில் யென
மழை வரமாலே போய் விடுகின்றது
மழையில் நனையுங்கள்
மகிழ்சியில் திளையுங்கள் !
வானம் கொட்டோ கொட்டென
மழையை தருகிறதா பாருங்கள் !
விடை கொடுக்க விருப்பமில்லை கலாம் !
-------------------------
கண்கள் கலங்குகின்றதே கலாம் உன்
புகழுடல் யின்று
பூமிக்குள் புதையுண்டு போகும்
யென நினைக்கும் போது !
இந்திய ஏவுகணையின் நாயகனே
இந்த ஒரு முறையேனும்
நீ எழுந்துவர மாட்டாயா ? யெம்
இளைஞர்களை வழிநடத்த மாட்டாயா ?
மரணம் தொடும் வரை மாணவர்கள்
மத்தியிலே நின்றதேனோ அந்த
மாணவர்கள் மகிழ்சியெல்லாம்
இப்போது வெறும் கானல் தானோ ?
வல்லரசான இந்தியா இன்னும்
நல்லரசாக வேண்டுமே
அதற்கு உன் உரை தூண்டுமே ?
ஆயிரம் கலாம்களை நீ விதைத்து விட்டதால்
காலன் உன் உயிரை பறித்து விட்டானோ !
விண்வெளி சோதனை போதுமென்று
மண் உலக சோதனைக்கு விரைந்த
கலாம் உனக்கு ஒரு வீர ஜலாம்
--------------------------
மீண்டும் ஒருமுறை நீ பிறந்து வருவதாய்
கனவு கண்டேன் கலாம் !
நீ தானே எங்களை கனவு காண சொன்னாய்
எங்களை
கனவு காண வைத்து விட்டு
நீ கனவுலகம் சென்று விட்டாயே கலாம்!
கனவுகளை நினைவாக்க சொன்ன கலாம்
நீ மீண்டும் பிறப்பதாய்
நான் கண்ட கனவு
எப்போது நனவாகும் ?
மற்றவர் போல் நான்
உன் மறைவுக்கு கண்ணீர் சிந்த மாட்டேன்
அதை நீ விரும்பவும் மாட்டாய் !
இந்திய விண்வெளிக்கு நீ அளித்ததும்
இளைஞர்களிடம் நல்லதை நீ விதைத்ததும்
நாடறியும் கலாம்
எம் தேசத்தின் முதல் குடிமகனாக இருந்த கலாம்
நான் வைப்பேன் உனக்கு வீர ஜலாம் !
--------------------------------
நீலக்கடலில் பிறந்த அலையே !
கரை நெறுங்கும் போது மட்டும் நீ
கடும் கோபம் கொண்டு
சீறி எழுகின்றாய் பின்
அப்படியே கரைந்து
கடலுக்குள் சென்று விடுகின்றாய் யேன் ?
யார் மீது கோவம் உனக்கு
எவர் தேடி கரை வந்தாய்
கண்டுபிடித்தாயா இல்லையே ?
இன்னுமொறு அலையிடம்
தூதுவிட்டு விட்டு நீ
துயில் கோள்ள போய்விடுகிறாய் !
பவளபாறையும் பலவகை மீனையும்
நீ பதுக்கி வைத்தது போதாதா ?
கரை தேடி வந்து மனித
இறை தேட அழைகின்றாயோ ?
அடங்கு அலையே அடங்கு
ஆர்பரிக்காமல் அமைதியாய் வா!
படகில் செல்லும் மீனவரை
பாதுகாப்பாய் கொண்டுவா !
ஆழ்கடலில் இருந்தாலென்ன
அமைதி கடலாய் இருந்து பாரேன்
சாம்பார் காதல் .... !
------------------
நிலவை காதலித்தேன்
ஆகாயத்தில் அந்தரத்தில்
நான் தொங்கி கொண்டிருக்கிறேன்
நீ எப்படி என்னை நெருங்குவாய் என சிரித்தது ?
உலாவரும் காற்றை காதலித்தேன்
நானோ உருவம் இல்லாதவள்
உன்னால் எனை எப்படி உணர்வுடன்
தொட முடியும் என்று எளனம் செய்த்து !
நிலத்தினை காதலித்தேன்
நிம்மதியாய் நீ வாழ இடம் உணவு
யெல்லாம் இப்போது தருகிறேனே
போதாதா !
இறுதி காலத்தில் வா
இடம் தருகிறேன் என்றது !
நீரை காதலித்தேன்
உன் உடல் அழுக்குடன்
உள்ள அழுக்கையும் எனை வைத்து கழுவிகொள்
காதல் மட்டும் வேண்டாம்
எனை காதலித்தால்
சுனாமியாய் வந்து உன்னை சுருட்டி விடுவேண் என்று பயம் காட்டியது !
நிலவை
கவிஞர்கள்
பெண்பாலகவே
குறிப்பிடுகிறார்கள்.
ஆனால்
நிலவிற்கு
சந்திரன்
என்றஆண்பால்்
பெயரும்
இருக்கையில்
அது
ஆண்பாலா?
பெண்பாலா?
்
்
எந்த வகை நட்பு . . . . ?
--------------------------
ஐந்து வயதில் ஆரம்ப பள்ளியில்
அருகில் அமர்ந்தபடி அடிக்கடி கிளிவிட்டு
அழவைத்து பார்த்த
ஐயப்பனே எங்கு போனாய் ?
ஆசிரியரை பார்த்து
அவன் தூங்குகிறான் யென
அப்போதே போட்டுவிட்ட
அமுதா எங்கே வாழ்கிறாள் ?
எட்டாம் வகுப்பில் எவருக்கும் தெரியமால்
திருட்டு தம் அடிக்க
பொறுப்பாய் சொல்லி தந்த
பாலனை பார்க்க வேண்டும் !
பத்தாம் வகுப்பில் நான் பாஸாக
கோவில் படியேறி படியேறி
பிரார்தனை செய்த பெண் தோழி
எங்கிருக்கிறாள் ?
கல்லூரி சாலையில்
கைகோர்த்து நடந்த
கவலையில்லா
நட்பு கூட்டம்
இப்போது எங்கே போனது ?
இளமையில் பழகிய நட்பு
இன்பமாய் இருந்தாலும
சீறி எழு தமிழா !
----------------------
சிறுநாடு சிறுநாடு யென்றிருந்தோம்
சிரிலங்காவை - அது
பெரும் நரி வாழும் நாடென்பது
நமக்கு யிப்போது தெரிகிறதா !
புலிகூட்டத்தை அடக்கியதால்
அந்த நரிகூட்டம்
நமை சீண்டி பார்கிறதோ - நம்
அம்மாவை எழுதியதோ ?
தாய்நாட்டை பழித்தாலே
தாய் தடுத்தாலும் விடாத தமிழன்
தாயான முதல்வரை
பழித்தால்
தன்மானம் இல்லாமல் இருப்பானோ ?
நாம் புலிகளல்ல சிங்கங்கள் !
நம் சீற்றம்
சிரிலங்காவின் சிரிமாவோக்களை
சிந்திக்க அல்ல சிதறடிக்கட்டும்
சீறி எழு !
பிண குழி போன கதை யார் அறிவார் !
---------------------------
ஒடும் சாக்ககடை அருகே
ஒரு பத்து குடிசைகள்
ஒர் காற்று ஓங்கி அடித்தால்
ஒடிந்து விழும் என்றிருக்கும் !
சேரு கலந்த மண்ணாய் அங்கு
தெரு சாலைகள் !
வீட்டின் முன்னே
சேர்த்துவைத்த குப்பைகள்
மலைபோல நிறைந்திருக்கும் !
காலையிலே எழுந்த கணவன்
கைவண்டி தள்ளி செல்வான்
மனைவி முன்னே !
தெரு தெருவாய்
குப்பைகளை அள்ளி போட்டு
ஓடாத சாக்கடையை
சட்டியிலே அள்ளி போட்டு
சுத்தம் செய்வான்
சலிப்பெதும் யில்லாமல் !
இன்னும் சரியில்லை
என்றொருத்தி சத்தம் செய்வாள்
சரியென்று
மிதக்கும் மலத்தினையும்
சட்டியிலே அள்ளிகொள்வான்
சங்கடமே இல்லாம
தமிழர் திருநாளாகவே இருந்து விட்டு போகட்டும் !
--------------------------------------
ஏர் பிடிக்கும் உழவனை
உழைப்பாளி என்றுதான்
உனக்கு தெரியும் !
அவன் மண்ணை பொன்னாக்கும்
மந்திரவாதி என்பது
என்பது எத்துனை பேருக்கு புரியும் ?
வயல் வெளியில் அவன் சேர்க்கும்
தண்ணிரைவிட
வேர்வைதுளிகள் தான்
அதிகம் பாய்ந்திருக்கும் !
அவன் கட்டிய
வரப்புகள் உயரும்
ஆனால் அவன் வாழ்க்கை மட்டும்
என்றும் உயராது !
மூன்று வேலை முழு உணவு
இதுவரை அவனுக்கு
முழுமையாய் கிடைத்தத்தில்லை !
இதில் தை திருநாளை
தமிழர் திருநாள்
என்று வேணால் கொண்டாடிகொள்ளுங்கள்
உழவன் திருநாள் என்று சொல்லி
அவன் உணர்வுகளை சீன
நண்பர்கள் (41)

கவி கண்மணி
கட்டுமாவடி

shankar
ஆரம்பாக்கம்

indhuarchunan
colombo

பானுஜெகதீஷ்
கன்யாகுமரி
