எங்கே போனது அந்த நட்பு

எந்த வகை நட்பு . . . . ?
--------------------------
ஐந்து வயதில் ஆரம்ப பள்ளியில்
அருகில் அமர்ந்தபடி அடிக்கடி கிளிவிட்டு
அழவைத்து பார்த்த
ஐயப்பனே எங்கு போனாய் ?
ஆசிரியரை பார்த்து
அவன் தூங்குகிறான் யென
அப்போதே போட்டுவிட்ட
அமுதா எங்கே வாழ்கிறாள் ?
எட்டாம் வகுப்பில் எவருக்கும் தெரியமால்
திருட்டு தம் அடிக்க
பொறுப்பாய் சொல்லி தந்த
பாலனை பார்க்க வேண்டும் !
பத்தாம் வகுப்பில் நான் பாஸாக
கோவில் படியேறி படியேறி
பிரார்தனை செய்த பெண் தோழி
எங்கிருக்கிறாள் ?
கல்லூரி சாலையில்
கைகோர்த்து நடந்த
கவலையில்லா
நட்பு கூட்டம்
இப்போது எங்கே போனது ?
இளமையில் பழகிய நட்பு
இன்பமாய் இருந்தாலும்
அது இறுதி வரை தொடராமல்
இடையிலே முடிந்ததேன் ?
இப்போது
பணிக்காக பலரிடம்
பல் காட்டி பழகுவதும்
பத்து ரூபாய் கடன் கேட்டால்
பர்சை பார்த்து
பதில் சொல்வதும்
எந்தவகை நட்பென்று
எனக்கின்றும் புரியவில்லை ?

எழுதியவர் : (3-Aug-14, 8:58 am)
சேர்த்தது : m arun
பார்வை : 63

மேலே