மழைக்கு குடை வேண்டாம்
மழை வருது மழை வருது குடை வேண்டாம் !
-----------------------------------
கொட்டும் மழை கண்டு
குடை பிடிக்க வேண்டாம் தோழர்களே !
வானத்துக்கு வருத்தமாகிவிடும்
எப்போதாவது மனிதன் மகிழ
மழை கொடுத்தால்
கருப்பு குடை பிடித்து
கண்டனம் தெரிவிகிறானே ?
வாடட்டும் வறட்சியில் யென
மழை வரமாலே போய் விடுகின்றது
மழையில் நனையுங்கள்
மகிழ்சியில் திளையுங்கள் !
வானம் கொட்டோ கொட்டென
மழையை தருகிறதா பாருங்கள் !