நீதான் என் ஆன்மாவின் பெண் வடிவம்

வார்த்தைகள் மட்டும்
தடித்துக்கொண்டே போகிறது
எனக்கும் உனக்குமிடையில்..

கோபத்தின் விளிம்பில்
தற்கொலை முயற்சியில் நான்
உன் வார்த்தைகளின் உக்கிரம்
என்னை மரணத்தில் தள்ளுகிறது..

என்னை போலவே நீயும்
அங்கு மரணத்தின்
கைகளில் மயங்கி
கிடப்பாயென நானுமறிவேன்..

இக்கவிதை மூலம்
சமாதான தோனி ஒன்று அனுப்புகிறேன்..
தயங்காமல்
ஏறி வந்துவிடு..

நீ தந்து போன வலிகள்
என்னுயிரை தின்று கொண்டிருக்கிறது..
நீ வந்து போன தடயங்கள்
நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது..

கலையும் மேகமாய்
உருவமிழந்து போகிறேன்
விடியும் காலை வரையிலும்
உறக்கமிழந்து போகிறேன்..

வெடித்து சிதறி
ததும்பும் குரலால்
அழும் ஆன்மாவாய்
ஆர்ப்பரித்து அடங்கிப்போகிறேன்..

உன் பிரிவின் ரணம்
என்னை பலதடவை
மரணித்து விடுகிறது..

மரணித்து மரணித்து
என் மனம் மரத்து போகிறது..

நீதான் என் ஆன்மாவின்
பெண் வடிவம்..
நீதான் என் தேவைகளின்
மொத்த உருவம்..

மண்மீது தூரும் மழையாய்
கோபம் தொலைப்போம் வா..
மலர்மீது புரளும் தென்றலாய்
தேகம் சேர்வோம் வா..

இடைவிடாமல் கட்டியணைத்து
காதல் செய்வோம் வா..
இதழோரம் முத்தம் பதித்து
காலம் கடத்துவோம் வா..

எழுதியவர் : கோபி சேகுவேரா (8-Aug-15, 1:13 pm)
பார்வை : 166

மேலே