தமிழர் திருநாள் ஆகவே இருக்கடும்

தமிழர் திருநாளாகவே இருந்து விட்டு போகட்டும் !
--------------------------------------
ஏர் பிடிக்கும் உழவனை
உழைப்பாளி என்றுதான்
உனக்கு தெரியும் !
அவன் மண்ணை பொன்னாக்கும்
மந்திரவாதி என்பது
என்பது எத்துனை பேருக்கு புரியும் ?

வயல் வெளியில் அவன் சேர்க்கும்
தண்ணிரைவிட
வேர்வைதுளிகள் தான்
அதிகம் பாய்ந்திருக்கும் !
அவன் கட்டிய
வரப்புகள் உயரும்
ஆனால் அவன் வாழ்க்கை மட்டும்
என்றும் உயராது !

மூன்று வேலை முழு உணவு
இதுவரை அவனுக்கு
முழுமையாய் கிடைத்தத்தில்லை !

இதில் தை திருநாளை
தமிழர் திருநாள்
என்று வேணால் கொண்டாடிகொள்ளுங்கள்
உழவன் திருநாள் என்று சொல்லி
அவன் உணர்வுகளை சீன்ட வேண்டாம் !
அவன் உயரட்டும்
நம் அளவாவது !
அதன் பின்
உழவர் திருநாள் என்று
உரத்த குரல் எழுப்பி
தை திருநாளை
தரணி போற்ற கொண்டாடுவோம்
அதுவரை
இது தமிழர் திருநாளாகவே
இருந்துவிட்டு போகாட்டும் !

எழுதியவர் : (14-Jan-14, 9:27 pm)
பார்வை : 86

மேலே