தமிழர் திருநாள்
வீட்டோடு உங்கள் மனங்களையும்
கழுவி வெள்ளையாக்குங்கள் - அதுவே போகி
உச்சிக்கரும்புபோல் உவர்ததுபோகாமல்
அடிககரும்புபோல் எப்போதும் இனிபபாயிருங்கள்
அந்த இன்பம் சகல ஜீவனிடமும் பொங்கட்டும்
அதுவே பொங்கல்
மஞ்சு விரடடோடுநம் மனதிலுள்ள அகம்பாவம்
பொறாமை தீயஎண்ணம் போன்ற மாயைகளையும்
விரட்டுங்கள் - அதுவே மாட்டுப்பொங்கல்