பரிதாபம்
தினம் தினம் உதிக்கும்
சூரியனுக்கு ஓர் நன்றியாய்
ஓர் பொங்கல் முட்டி
அற்புதம் தமிழா
வயல் உழுதலை நேர்த்தியாக்கிடும்
அந்த வயலோனுக்கும் நன்றி
அருமை தமிழா
இப்படி ஓர் அதிசய நாளை
உதயமாக்கி சென்றான் எமக்காய்
எம் தமிழன்.
ஆனால்,
தரிசனத்திற்காய் ஆலயங்கள் இருக்க
பாரம்பரியங்களை மறந்து
தொலைக்காட்சி வழிபாட்டில்
ஆழ்திருக்கும் கூட்டத்தை
பாரடா தமிழா .
இன்று பொங்கல் கொண்டாட்டங்களுக்கு
திண்டாடமாகிக் கொண்டிருக்கிறது
தமிழா.
இவற்றை நினைத்தால்
ரத்த கண்ணீர் வருகிறது
தமிழா