வீரம் பொங்கும் மாட்டு பொங்கல்

மண்ணில் மனி விதைத்து
பொன் கதிர் விளைசல் காண
ஏழு போக கனவு கொண்டு
ஏர் உழவன் அழ் மனதில்
உழைப்பின் ஒரு பாதி இந்த
மாடுகள் பங்கும் ஜோடி
கருத்தாலும் அது களைப்பில்லை
களத்து மேட்டில் வெளஞ்ச நெல்லை
இங்கே ஒரு மணி விழா இந்த
மாட்டு பொங்கல் திருவிழா
சீறிவரும் அதன் சீவிய கொம்பில்
பொன் கொண்ட முடிப்பை நோக்கி
வீரம் மிஞ்சும் தீர திருமகன்கள்
மார் நிறுத்தி மாடுகளை அடக்க
பிடி கிட்டா மானம் ஒன்றே இவன்
வீரம் நிறைந்த கோலம் அன்றே
அடங்காத காளைகளும் மதுரை
அலங்காநல்லூரில் அணிவகுத்து
திரளாக பெறும் கூட்டம் இங்கே
வீர திறமையை மதிப்பீடு செய்யும்
தமிழ் மண்ணில் தரணி போற்றும்
திறமை மிஞ்சிய உரம் கொண்டு
இந்த திருவிழா இனியும் அழியாது
காத்து வரனும் நாம் வருடம் தோறும்
பாண்டிய மண்ணில் ஒரு விளையாட்டு
வேணும் என்றும் வீரம் மார் தட்டு
ஸ்ரீவை.காதர்.