s.shanmugapriya (priya) - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : s.shanmugapriya (priya) |
இடம் | : வெலிமடை |
பிறந்த தேதி | : 22-Jul-2002 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 23 |
நான் கல்வி கற்கிறேன்.
பத்து வருட தென்றலிலே
பறக்கிறது ஓர் ஆசை
பரிசு
பற்றிக்கொள்ள மனமுண்டு
பதம்பார்க்க
பணமில்லை சேமிப்பிலே
பாசம்கொள்ள உறவில்லை
பவம் அவன் ஏங்குகிறான்
பாதம் தொடும் ஓர் துவிவண்டிக்காய்
பாவம் பாரா
பாரல்லவா இது
பிஞ்சு கரங்கள்
பிச்சையேந்தி
பிறரறியா ஓர் இடத்தில்
பிச்சையிட்டு சேமிக்கிறான்
பிச்சையினை
பீதியில்லா பையன் ......
புன்னகை
பூத்து சோகமில்லாது
பேரின்பம் கொண்ட
பையனவன் தன் ஆசை
பொக்கிசத்தை பெற்று
போகிறான் ஓர் கன்னி
பயணம்
பாராது
பின்தொடர்ந்த
புத்தியில்லா வண்டியவன்
புழுதி பறக்க
பூத்த poovai பெயர்த்தெடுத்தான்
பேரின்ப பொழுதினிலே
பையனவன் வண்
என்
இதயம் துடிக்கிறது
வாழ்வதற்கல்ல
என்
இனியவனை
வாழவைப்பதற்காக
சோகத்தை நீ தந்தாய்
சொந்தத்தை ஏன் தர மறுக்கிறாய்
அன்பை நீ தந்தாய்
அரவணைப்பை ஏன் தர மறுக்கிறாய்
மகிழ்ச்சியை நீ தந்தாய்
மனதை ஏன் தர மறுக்கிறாய்
கண்ணீரை நீ தந்தாய்
காதலை ஏன் தர மறுக்கிறாய்
அனைத்தையும் தர மறுத்த நீ - ஏன்
என்னை மட்டும் வாழ வைக்கிறாய்
உழைத்து வாழ்வது ஒன்றையே
பழகிப் போன எனக்கு
கடன் வாங்கவே கூசுகிறது
கடமையை எண்ணி
கண்ணீர் விடுகிறேன்!
காசுக்காக நான் படும்
பாட்டையெண்ணி வேதனையில்
வெம்புகின்றேன்!
தீயில் கருகும் பயிர் போலே!
கைபிடித்த கணவன் நீ
கட்டிலில் மல்லாந்து
படுத்துக் கொண்டே
பத்திரிகைப் படிக்கிறாய்
"வறுமையின் கொடுமையால்
குடும்பத்துடன் தற்கொலை"
உன் மனைவி வாழ்விற்கும்
சாவிற்குமிடையில் போராடுவது
தெரிந்திருந்தும் எனக்கென்ன விதியென்று
அரைவயிற்று உணவும்
எப்படி வருகிறதென
யோசிக்காத உன் மூளை
அரசியல் பேசுது
நிதி அமைச்சகத்தையும்
விட்டுவைக்காமல்!
வீர வசனம் பேசுகிறாய்
அரசியல் சாசனமே
சரியில்லையென உன்
அரி
தோள், சாயும் போது
தோள்கொடுப்பதினால்
அவன் தோழனாகிறான் !
தலை, சாயும் போது
மடி கொடுப்பதினால்
அவள் தாயாகிறாள்!
விழிகள் , அழும் போது
துடைப்பதினால்
அவள் தோழியாகிறாள்!
தடுமாறும், போது
தாங்குவதினால்
அவன் தகப்பனாகிறான்!
தோழமைக்கு ஏது வடிவம்
தோள் கொடு!
பிறந்த தினம் முதல் மானிட வாழ்வில்
நொடிக்கணக்கில் துன்பங்கள்
நம்மை சுற்றி வட்டமிடும் போது
எப்படி வாழலாம் நிம்மதியுடன்
பயில ஏட்டை எடுத்தால்
அதில் ஏனோ விரக்தி நிலை
பிறக்கின்றது மானிடா
எமது குறைகளை கூறி
வதைப்பவர்களில்
எதோ ஓர் விரக்திநிலை
ஜனனமாகிறது தோழா
எமக்கான நல்லவற்றை
மறந்தவர்களாய்
அறிவுக்கு சுடராகிடும்
ஆசானிலும்
ஏதோ கன்மூடித்தனமான விரக்தி நிலை
உதயமாகிறது
நல்லுலகிற்கு கூட்டிச் செல்லும்
நல்லான் என்ற எண்ணத்தையே
மறந்த ஜென்மங்களாய்
காதல் தோல்வியால்
காதல் மீது ஓர் விரக்தி நிலை
ஜனனமாகிறது
தீர்வு காண முடியாத காதலர்களின்
உண்மைகளை மறந்தவர்களாய்