தோள் கொடு
தோள், சாயும் போது
தோள்கொடுப்பதினால்
அவன் தோழனாகிறான் !
தலை, சாயும் போது
மடி கொடுப்பதினால்
அவள் தாயாகிறாள்!
விழிகள் , அழும் போது
துடைப்பதினால்
அவள் தோழியாகிறாள்!
தடுமாறும், போது
தாங்குவதினால்
அவன் தகப்பனாகிறான்!
தோழமைக்கு ஏது வடிவம்
தோள் கொடு!