சிட்டுக்குருவி பேசுகிறது

மனிதா ! மனிதா !
அரிதா ! அரிதா !
நான் உனக்கு
அரிதா ?!!
உன்னால் நான்
அழிவதா ?!!
ஏய் ! நீயார் ?
என்கிறாயா?
கூம்பு அலகு அழகு
எடை அலகு குறைவு
கிண்ண வடிவ வீடு -வீட்டு
திண்ணையில கூடு
மரத்திலும் தொங்கும் வீடு
தரத்திலும் தாங்கும் கூடு
புழுவும் பூச்சியும் உணவு
பூவும் நெல்லும் சோறு
என் பெயர்
சிட்டுக்குருவி
தூக்கணங்குருவியும்
ஊர்க்குருவியும் என்
உறவு குருவிகள்
பழுப்பு சாம்பல் நிறம்
வெளுப்பு குறைவான நான்
பெண் குருவி
மேல் நிறம் தவிடு
கறுப்பு மஞ்சள் கோடு –அதுயென்
காதல் குருவி
அன்று
தென்னம் தோப்பில்
சிட்டாக உறவாடினேன்
மூங்கில் காட்டில்
குஞ்சு பொறித்தேன்
இன்று
அசுத்தமான சுற்று சுழலில்
வெப்பமயமாகி கொல்லப்படுகிறேன்
அலைப்பேசி நுண்ணலையில
இனப்படுகொலை செய்யப்படுகிறேன்
கோயில் கோபுரத்தில் வாழ்ந்தேன்
கதிர்வீச்சு கோபுரத்தால் சாகிறேன்
சிட்டுக்குருவி நான் இன்று
மலட்டுக்குருவி –காரணம் உன்
மின்காந்த அலை கருவி.
ஈழத்தில் மனிதயினத்தை அழித்த
ஈனப்பிறவியான உன்னிடமே
வெட்கமற்று கேட்கிறேன்
எம் இனத்தை காப்பாற்று !
மரணித்த உன் மனிதத்தை
ஜனனிக்க செய்தாவது -எம்
மரணத்தை தடுத்து நிறுத்து !
மனிதா ! மனிதா
எனை காப்பாற்று
மன்றாடி கேட்கிறேன் !
என் இனத்தை காப்பாற்று !
---------------------------------- இரா. சந்தோஷ் குமார்