Shafna - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Shafna |
இடம் | : colombo |
பிறந்த தேதி | : 30-May-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 22 |
நான் ஒரு மாணவி .தெ.கி. ப .கல்வி கற்கிறேன் .
அ - அழகானவள்
ஆ - ஆருயிரானவள்
இ - இனிமையானவள்
ஈ - ஈடற்றவள்
உ - உயர்வானவள்
ஊ - ஊக்கமானவள்
எ - எந்திரமானவள்
ஏ - ஏற்றமுள்ளவள்
ஐ - ஐக்கியமானவள்
ஒ - ஒப்பற்றவள்
ஓ - ஓவியமானவள்
ஔ - சௌக்கியமானவள்
தமிழுக்கு உயிராம் உயிர் பன்னிரெண்டும்
தலை தூக்கி நிற்கின்றாய் உயிர் எழுத்துக்களில்
தடுமாறி நிற்கின்றேன் - நான்
தவமிருந்து பெற்ற உன்னை இழந்து
வாடகைக்கு,
வீடு கிடைத்தது
உணவு கிடைத்தது
உறவும் கிடைத்தது
இவை அனைத்தும் கிடைத்த எனக்கு
நீ மட்டும் கிடைக்கவில்லை
உன் மரணத்தை ஏற்க மறுக்கும்
என் இதயத்திடம் சொல்லி விடு
நீ என்னைப் பிரிந்து பல ஆண்டு கடந்ததை
அப்ப
அ - அழகானவள்
ஆ - ஆருயிரானவள்
இ - இனிமையானவள்
ஈ - ஈடற்றவள்
உ - உயர்வானவள்
ஊ - ஊக்கமானவள்
எ - எந்திரமானவள்
ஏ - ஏற்றமுள்ளவள்
ஐ - ஐக்கியமானவள்
ஒ - ஒப்பற்றவள்
ஓ - ஓயாரமானவள்
ஔ - சௌக்கியமானவள்
தமிழுக்கு உயிராம் உயிர் பன்னிரெண்டும்
தலை தூக்கி நிற்கின்றாய் உயிர் எழுத்துக்களில்
தடுமாறி நிற்கின்றேன் - நான்
தவமிருந்து பெற்ற உன்னை இழந்து
வாடகைக்கு,
வீடு கிடைத்தது
உணவு கிடைத்தது
உறவும் கிடைத்தது
இவை அனைத்தும் கிடைத்த எனக்கு
நீ மட்டும் கிடைக்கவில்லை
உன் மரணத்தை ஏற்க மறுக்கும்
என் இதயத்திடம் சொல்லி விடு
நீ என்னைப் பிரிந்து பல ஆண்டு கடந்ததை
அப்ப
சோகத்தை நீ தந்தாய்
சொந்தத்தை ஏன் தர மறுக்கிறாய்
அன்பை நீ தந்தாய்
அரவணைப்பை ஏன் தர மறுக்கிறாய்
மகிழ்ச்சியை நீ தந்தாய்
மனதை ஏன் தர மறுக்கிறாய்
கண்ணீரை நீ தந்தாய்
காதலை ஏன் தர மறுக்கிறாய்
அனைத்தையும் தர மறுத்த நீ - ஏன்
என்னை மட்டும் வாழ வைக்கிறாய்
மலர் மஞ்சத்தில்
மகிழ்ந்தது பனித்துளி !
வஞ்சம்கொண்ட ஆதவன்
கரங்களால் கரைந்தன !
சரோ
கண்ணயர்ந்த போது
என் கற்பனையில் சிணுங்கிய
என் கைத்தொலைபேசி
உன் அழைப்பில் நிஜமாய் சிணுங்குது
அரை மயக்கத்தில் 'ஹலோ' என்றேன்
அரை நொடியில் என் உயிரான உன் குரல்
நான் அறியா என்னை நீ அறிவாய்
என் தூக்கத்தை கண்டறிந்தாய்
இதழோரப் புன்னகையோடு அனுமதி கேட்டேன்
இமைகளைத் திறந்து உயிர் பெற
என்றும் இனியவன் நீ
சிறு புன்னகையோடு மீண்டும் அழைத்தாய்
முடங்கிப் போன என் அணுக்கள் உயிர் பெற்றது
முடிந்து போன என் வாழ்க்கை சிறகு விரித்தது
மீண்டும் என் வாழ்வில் சந்தோசம் பிறந்தது
என் உயிர் நண்பன் உன்னை காண்பதை நினைத்து
என்னவன் என்னை விட்டு பிரிந்த போது
என் குழந்தைக்காய் உயிரை கையில் ப
உன்னத உலகில்
உயர்வாய் போற்றும் மானிடா
உன் கண்களைத் திறந்து பார்
உன்னைச் சுற்றி ஆயிரம் கேவலங்கள்
பசியின் கொடுமை நீ அறியாய்
பாதையோரச் சிறார்களை கேட்டறிவாய்
படித்தும் பாக்கியமற்ற பாவிகள் நாம்
பாதையோரமாய் பார்வையைத் தாழ்த்திச் செல்கின்றோம்
கருவறையில் எட்டி உதைத்த போது - அவள்
கண்ணீர் விட்டாள், பிஞ்சுக் கால்கள் வலித்திடுமோ என்று
கருணையே இன்றி துரத்தி அடிக்கின்றோம் இன்று
கட்டியவளின் அட்பமான ஒரு நிமிட சுகத்திற்காய்
புனிதமான காதலை கொச்சைப்படுத்தும்
புண்ணியவான்கள் இன்றைய நவீன காதலர்கள்
புரிந்துணர்வின்றி கண்ட இடத்தில் கட்டியனைத்து முத்தமிடும்
புத்திகெட்ட மனித ஜென்மங்கள்
நான் அழுத நேரம்
என் பெற்றோர் என்னிடமில்லை
நான் தனித்த நேரம்
என் காதலன் என்னிடமில்லை
என்றும் என்னை தொடர்ந்த என் நிழல்
இன்று அது கூட என்னிடமில்லை
இரு துளிக்கண்ணீருடன் தலை நிமிர்ந்தேன்
இரு கை தூக்கி அரவணைத்தாய் நீ
என்றும் மாறாத அதே நட்புடன்
என்னை அரவணைக்கும் இரண்டாம் தாய் நீ.