நட்பு விரியும் மொட்டு

நான் அழுத நேரம்
என் பெற்றோர் என்னிடமில்லை
நான் தனித்த நேரம்
என் காதலன் என்னிடமில்லை
என்றும் என்னை தொடர்ந்த என் நிழல்
இன்று அது கூட என்னிடமில்லை
இரு துளிக்கண்ணீருடன் தலை நிமிர்ந்தேன்
இரு கை தூக்கி அரவணைத்தாய் நீ
என்றும் மாறாத அதே நட்புடன்
என்னை அரவணைக்கும் இரண்டாம் தாய் நீ.