என்னவள் உனக்காய் ஒரு துளி
அ - அழகானவள்
ஆ - ஆருயிரானவள்
இ - இனிமையானவள்
ஈ - ஈடற்றவள்
உ - உயர்வானவள்
ஊ - ஊக்கமானவள்
எ - எந்திரமானவள்
ஏ - ஏற்றமுள்ளவள்
ஐ - ஐக்கியமானவள்
ஒ - ஒப்பற்றவள்
ஓ - ஓயாரமானவள்
ஔ - சௌக்கியமானவள்
தமிழுக்கு உயிராம் உயிர் பன்னிரெண்டும்
தலை தூக்கி நிற்கின்றாய் உயிர் எழுத்துக்களில்
தடுமாறி நிற்கின்றேன் - நான்
தவமிருந்து பெற்ற உன்னை இழந்து
வாடகைக்கு,
வீடு கிடைத்தது
உணவு கிடைத்தது
உறவும் கிடைத்தது
இவை அனைத்தும் கிடைத்த எனக்கு
நீ மட்டும் கிடைக்கவில்லை
உன் மரணத்தை ஏற்க மறுக்கும்
என் இதயத்திடம் சொல்லி விடு
நீ என்னைப் பிரிந்து பல ஆண்டு கடந்ததை
அப்படியேனும் ஒரு வரம் கிடைக்கட்டும்
உன்னை என் கண்கள் மீண்டும் கண்டிட