நீ ஏறிய ராட்டினம்
முயல் குட்டிகள்
யானைகளோடு சேர்ந்து கொண்டு,
குதிரைகளோடு சண்டை பிடித்தன.
ஆம்,
நீ ராட்டினத்தில் ஏறி அமர்ந்தது,
மரக்குதிரையில்....
ராட்டினம் சுற்றுகையில்,
எனக்கு மட்டுமே கேட்டது,
முயல் குட்டிகளின் முனுகலும்,
யானைகளின் பிளிறலும்,
குதிரைகளின் கம்பீரமான குளம்படி சப்தமும்....