ஒவ்வொரு மழையிலும்

ஒவ்வொரு மழையிலும்,
இடியோசையில் அதிர்ந்து,
என்னை இறுக கட்டிக்கொள்வாய் என்ற,
கனவு இன்றுவரை பகல் கனவாகவே...

எனக்கு முன்பாகவே,
நீ,
உன் நாணத்தை இறுக கட்டிகொள்கிறாய்....

உன் நாணம்,
இடியோசையை
வென்ற
மெல்லோசை.....

எழுதியவர் : துளசி வேந்தன் (30-Jan-14, 1:27 pm)
சேர்த்தது : Baskaran Kannan
Tanglish : ovvoru mazhaiyilum
பார்வை : 58

மேலே