இதயம் மீட்டும் ராகம்

சோகத்தை நீ தந்தாய்
சொந்தத்தை ஏன் தர மறுக்கிறாய்

அன்பை நீ தந்தாய்
அரவணைப்பை ஏன் தர மறுக்கிறாய்

மகிழ்ச்சியை நீ தந்தாய்
மனதை ஏன் தர மறுக்கிறாய்

கண்ணீரை நீ தந்தாய்
காதலை ஏன் தர மறுக்கிறாய்

அனைத்தையும் தர மறுத்த நீ - ஏன்
என்னை மட்டும் வாழ வைக்கிறாய்

எழுதியவர் : (29-Jan-14, 1:06 pm)
சேர்த்தது : Shafna
பார்வை : 85

மேலே