பிடிவாதமானவள்
என்னை உலகம் எதிர்க்க
நீ மட்டும் அரவணைத்தாய்
புரியாத புதிர்தான்....
கிண்டல் செய்த மனிதர்கள் இன்று என் கண் முன்னே சிறு தூசிகளாய்
காலம் வென்ற இளைஞன் உன் முன்னோக்கு விழிகளால் அடையாளம் கண்டாய்
மௌனம் காத்து ஊமையாய் திரிந்தேன்
பேச்சாளனாக மாற்றினாய்
பிறரால் மாற்ற முடியாததை முடித்துக் காட்டினாய்
கண்டிப்பாக நீ பிடிவாதமானவள் தான்
உனக்காக அல்ல எனக்காக
ஆம் என்னுடய வெற்றிக்காக......