இயற்கை ஏன் மாறியது

இயற்கை ஏன் மாறியது ????

இறைவன் கொடுத்த வரம் இயற்கை வளம்
காடு, மலை, அருவி, ஆறு, காற்று, வானம், பூமி,
மேகம், மழை, பறவை, மிருகம் - மனிதனுக்கு வரம்
இவை யாவும் கேட்காமல் கொடுத்தது இயற்கை.
கொடுத்ததைக் கொண்டு பிழைத்தனர் மனிதர் அன்று.

மனிதனின் இயல்பு மாறி மனதில் ஆசை குடியேறியது
கொடுப்பவரை தொட்டுத் தொட்டு மேலும் கேட்கும் ஆசை
இயற்கையைத் தொட்டுத் தீண்டி அதிகம் கேட்டான்
இனப்பெருக்கம் இயல்பென நினைத்து மேலும் கொடுத்தது

பேராசை மனிதனை மிருகமாக மாற்றிவிட்டது
தட்டிப்பறிக்க இயற்கையை மிரட்டத் துணிந்தான்
பறிக்க நினைத்தால் அழுந்து போவாய் என்பதை
சீற்றம் கொண்டு எச்சரித்துப் பார்த்தது இயற்கை

கேட்டானா மனிதன் ?? மல்லுக்கட்டி மார்பைத் தட்டினான்...




நதியைத் தடுத்து அணைகள் கட்டினான்
காட்டை அழித்து நிலங்களாக்கினான்
காற்றை உறிந்து அமிலம் கக்கினான்
மலயைக் குடைந்து பாதைகள் அமைத்தான்

குவிந்த மணலை அள்ளச் சொன்னால்
ஆற்றைச் சுரண்டி பொட்டல் காடாக்கினான்
வெட்டித் தோண்டி நீரைக்குடித்தவன் – பூமியில்
ஆழத் துளைத்து தண்ணீர் உறிஞ்சினான்

நன்னீர் தந்த நதியில் நச்சுனீர் விட்டான்
மூச்சுக் காற்று தந்த வானில் புகையை வீசினான்
சுரங்கம் வெட்டி கணிமம் திருடி கனவான் ஆனான்
மலைச்சறிவில் நிலம் திருடி விடுதிகள் அமைத்தான்
விளைச்சல் பெறுக்க வேண்டி இயற்கை உரம் தவிர்த்து
விவசாய நிலத்தில் இராசாயன விஷம் கலந்தான்

இயற்கையை மதிக்கத் தெறியாமல் அறிவியல் படித்தான்
இயல்பை எதிர்க்க கருவிகள் கண்டுபிடித்து உறுமினான்
இராப்பகலாய் கண்விழித்து கணினியில் தலைதுருத்தி
செல்வாக்கத் துணை நிறுத்தி இயற்கைய இடித்துப்பார்த்தான்



போகட்டும் பொடியர் என சிலகாலம் பொருத்தது இயற்கை
புறிந்து திருந்துவார் என நினத்த்து சிலகாலம்
பட்டால் தெறியுமென மெல்லத் தட்டிப்பார்த்தது
கெட்டாலும் திருந்த மாட்டான் திமிர் பிடித்த மனிதன் இவன்

இயற்கை மாறியது தன் இயல்பை இழந்தது
அழிவைத்தடுக்க மனிதனை அடக்கத் துணிந்தது

பொருக்குமா பூமி ??
வெடித்துச் சிதறியது எரிமலையாய் !!!
ஆடிக்குலிங்கியது பூகம்பமாய் !!! சறிந்து சாய்ந்தது மலைச் சறிவில் !!!
உலர்ந்து வாட்டியது விளை நிலங்களில் !!! – தண்ணீரை
மடியின் அடியில் புதைத்து மறைத்தது

காற்றுக்கே மூச்சுத்திணறல் வந்தால் ??????
வீசி அடித்தது புயலாய் !!! தூக்கி எறிந்தது மனித உடைமைகளை !!!
முடக்கிப் போட்டது மனிதனை வாடைக்காற்றால் !!! கல்லும் உறைந்தது... கடும் பனியால்
கனலாய் வீசி தணலை மூட்டியது... காட்டை எரித்தது....


விண்வெளியைக் குடைந்து பார்த்தால் தாங்குமா வானம் ???
மனிதன் விட்ட அமிலக்காற்றை ஓட்டை போட்டு திருப்பி உமிழ்ந்தது
மேகம் திரட்டி மழையால் அடித்தது ஒரு போது..
மேகம் விரட்டி தணலால் வாட்டி தாகம் தந்தது மறு போது...

நதியும் கடலும் வளையல் அணிந்து சும்மா நிற்குமோ ????
ஜீவ நதிகள் சுண்டிச் சுறுங்கி ஓடைகளானது
அவை மேலும் வரண்டு பாலையானது.. –
அது கடலை அழைத்து கவலை சொன்னது.
ஆற்பரிக்கும் ஆழ்கடல் எழுந்து பூமியில் நுழைந்து,
ஆழிப்பேரலை வாயைப் பிளந்து உருண்டு வந்தது - அது
ஆணவ மனிதரை சுருட்டி விழுங்கி திரும்பி வழிந்தது

இயற்கையின் மாற்றம் தந்த சீற்றம் கண்டும்
திருந்தா மனிதர் இருந்தால் என்ன ?? மறைந்தால் என்ன ???


ஜ. கி. ஆதி

எழுதியவர் : ஜ. கி. ஆதி (14-Jan-14, 10:02 pm)
சேர்த்தது : ஜ. கி. ஆதி நாராயணன்
பார்வை : 186

மேலே