ஜ. கி. ஆதி நாராயணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜ. கி. ஆதி நாராயணன் |
இடம் | : பெங்களூரு |
பிறந்த தேதி | : 10-Jun-1954 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 256 |
புள்ளி | : 61 |
நான் ஒரு தமிழ்க் காதலன். எப்போதாவது கவிதை என்ற பெயரில் சியல் வரிகள் எழுதி என்னுடனே வைத்துக்கொள்வேன். ஒரு சில கவி அரங்க நிகழ்சிகளில் என் கவிதைகளை படித்திருக்கிறேன். நண்பர்களுக்கு சொல்லி அவர்கள் கண்டுகொள்ளாமல் போவதை பார்த்து ..... ?
அன்பன் ஜ. கி. ஆதி
போற்றத்தக்கது
விண்ணைத் தாண்டி செவ்வாய் தீண்டிய இந்திய சாதனை
அண்டம் கொண்டது ஒன்பது கோள்கள்
உலகம் சுழல்வது கோள்களின் விளைவு ...
புவியின் இயல்புகள் இயற்கையின் விளைவுகள் .
மனிதன் வாழ்வது க்ரகங்களின் பெயர்வால் ...
கட்டம் போட்டு கோள்களைக் காட்டி ( கட்டி? )
வானியல் சாத்திரம் உலகினில் முதலில்
சொன்னது இந்தியர் முன்னோர் காலம்.
பின்னால் வந்தவர் சாத்திரம் மாற்றி
வட்டம் போட்டு மனிதனைப் பூட்டி......
பிறவியில் வளம்பெற, கோள்களை வழிபட
வேள்விகள் நடத்தி.. வேடிக்கை காட்டி
கற்பனைக் கதையை நன்நெறி என்றிட
மானுடர் மனதில் மூடமை நுழைத்து
சோதிடம் சொல்லியே செல்வமும் சேர்த்தனர் !!!
மடமை மறைந்தது !!
ஜூலை 13: கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த தினம் இன்று..
ஜூலை 13: கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த தினம் இன்று..
உனக்கு மட்டுமா உலகத்த படைச்சான்
எல்லாருக்காகவும் படைச்சான்
நீ மட்டும் சுகத்தில்
பல பேர் சோகத்தில்
இருக்கவே அவனும் மொறச்சான்
மனுசா திருந்திவிடு
இன்றே வருந்திவிடு
நீயும் வாழ்ந்துவிடு
மற்றோரை வாழவிடு
உதவி செய்திடாதே
உபத்ரவம் செய்யாமல் இரு போதும்
கை கொடுத்திடாதே
யார்காலையும் வாராமல் இரு போதும்
மனுசா திருந்திவிடு
இன்றே வருந்திவிடு
நீயும் வாழ்ந்துவிடு
மற்றோரை வாழவிடு
போற்றி புகழ்ந்திடாதே
யாரையும் தூற்றாமல் இருந்தால் அதுபோதும்
கண்ணீர் துடைத்திடாதே
அழ வைக்காமல் இருந்தால் அதுபோதும்
மனுசா திருந்திவிடு
இன்றே வருந்திவிடு
நீயும் வாழ்ந்துவிடு
மற்றோரை வாழவிடு
வருந
இயற்கை ஏன் மாறியது ????
இறைவன் கொடுத்த வரம் இயற்கை வளம்
காடு, மலை, அருவி, ஆறு, காற்று, வானம், பூமி,
மேகம், மழை, பறவை, மிருகம் - மனிதனுக்கு வரம்
இவை யாவும் கேட்காமல் கொடுத்தது இயற்கை.
கொடுத்ததைக் கொண்டு பிழைத்தனர் மனிதர் அன்று.
மனிதனின் இயல்பு மாறி மனதில் ஆசை குடியேறியது
கொடுப்பவரை தொட்டுத் தொட்டு மேலும் கேட்கும் ஆசை
இயற்கையைத் தொட்டுத் தீண்டி அதிகம் கேட்டான்
இனப்பெருக்கம் இயல்பென நினைத்து மேலும் கொடுத்தது
பேராசை மனிதனை மிருகமாக மாற்றிவிட்டது
தட்டிப்பறிக்க இயற்கையை மிரட்டத் துணிந்தான்
பறிக்க நினைத்தால் அழுந்து போவாய் என்பதை
சீற்றம் கொண்டு எச்சரித்துப் பார்த்தது இயற்கை
இயற்கை ஏன் மாறியது ????
இறைவன் கொடுத்த வரம் இயற்கை வளம்
காடு, மலை, அருவி, ஆறு, காற்று, வானம், பூமி,
மேகம், மழை, பறவை, மிருகம் - மனிதனுக்கு வரம்
இவை யாவும் கேட்காமல் கொடுத்தது இயற்கை.
கொடுத்ததைக் கொண்டு பிழைத்தனர் மனிதர் அன்று.
மனிதனின் இயல்பு மாறி மனதில் ஆசை குடியேறியது
கொடுப்பவரை தொட்டுத் தொட்டு மேலும் கேட்கும் ஆசை
இயற்கையைத் தொட்டுத் தீண்டி அதிகம் கேட்டான்
இனப்பெருக்கம் இயல்பென நினைத்து மேலும் கொடுத்தது
பேராசை மனிதனை மிருகமாக மாற்றிவிட்டது
தட்டிப்பறிக்க இயற்கையை மிரட்டத் துணிந்தான்
பறிக்க நினைத்தால் அழுந்து போவாய் என்பதை
சீற்றம் கொண்டு எச்சரித்துப் பார்த்தது இயற்கை
என் கவிதைப் பெண் அழகானவள்.....
நான் படைத்த கவிதை ஒரு அழகான பெண்
கருத்தின் சாரம் கவிதையின் தலைப்பு
அதுவே அவள் தலை முளைத்த கருங்கூந்தல்
முதல் வரிகள் அவள் நெற்றிப் பொட்டு
என் கருத்தின் ப்ரதிபலிப்பு அவள் கண்கள் -
கருத்து காதலானால் பாட்டுப்பெண் கண்கள் கனிவாகும்
சமுதாய அவலங்களானால் கண்களில் பொறி பறக்கும்
துயரம் சொன்னால் கவிதைப் பெண் கண்கள் குளமாகும்
ஆன்ந்தம் பாடினால் இவள் வார்த்தை இமைகள் துடிக்கும்
வர்ணனைச் சொற்கள் இவள் மூக்கும் உதடும்
வார்த்தைகளின் கோர்வை என் கவிதை மகள் அணிகலங்கள்
நடுவில் சேர்த்த சந்தங்கள் அவள் இடையழகு
கருத்தோடு வார்த்தைகள் கைகோர்த்ததால்.. பாடல் பெண்ணின்
சுட்டு
மனித நேயப் பொங்கலிடுவோம் !!!!
நேர்மை அடுப்பமைத்து நெஞ்சுறுதிப் பானை இட்டு
ஒற்றுமை விரகடுக்கி மெய்யறிவுத் தீயை மூட்டி
அன்பெனும் அரிசி போட்டு காதல் பால் கலந்து
மனித நேயப் பொங்கல் வைப்போம் – மானுடம் தழைத்து ஓங்க !!!
ஏற்றத் தாழ்வகற்றி சமன்பெற்ற சமுதாயம் உறுவாக
நச்சும் கழிவுமற்ற நன்னீரும் காற்றும் வேண்டி
இயற்கை எழில்பெருகி மண்ணின் வளம் செழிக்க
பொங்கல் பண் பாடி விண்ணில் தமிழிசைப்போம்
மழையில், வெயிலில், சேற்றில், தண்ணீரில்
முக்காலும் முனைப்போடு உழவோடு வயலாடி
கதிர் விளைத்து களம் நிறப்பி உணவளிக்கும்
உழவன் திறம்போற்றி பொங்கல் இசை முழங்குவோம்.
மனித நேயம் தழைக்க முழக்கமிடுங்கள்...
பொ
நம்பிக்கை நாயகன் – உழவனுக்கு பொங்கல் வைப்போம் !!!
அடி வானில் திரண்டெழுந்து நீல வானை மறைத்து மூடி,
கார் மேகம் மழை பொழிந்து நீர் நிலைகள் வழிந்து ஓடி
வயல், காடு செழித்தோங்கி வையத்து பசி நீங்கும் - என
வருடந்தோறும் வான் நோக்கி நலம் வேண்டி “ நம்பி “ நிற்பான்.
கலம் மிச்சம் ஆகுமென கற்பனையில் நம்பிடுவான்
உழக்கே மிஞ்சினாலும் சலிக்காமல் உழைத்திருப்பான்
வானம் பொய்த்தாலும் வரும் காலம் வளமாகும் - என நம்பி
விதை நெல்லை குதிருக்குள் காத்து வைப்பான்.
நீல் வானம், கார் மேகம், செங்கதிரோன், இளங்காற்று
இவை யாவும் இயற்கையினால் உழவற்கு துணையாகும் - என நம்பி
எல்லோர்க்கும் உணவளிக்க முன்னேறும் முனைப்புடன