நம்பிக்கை நாயகன் - உழவனுக்கு பொங்கல் வைப்போம்

நம்பிக்கை நாயகன் – உழவனுக்கு பொங்கல் வைப்போம் !!!

அடி வானில் திரண்டெழுந்து நீல வானை மறைத்து மூடி,
கார் மேகம் மழை பொழிந்து நீர் நிலைகள் வழிந்து ஓடி
வயல், காடு செழித்தோங்கி வையத்து பசி நீங்கும் - என
வருடந்தோறும் வான் நோக்கி நலம் வேண்டி “ நம்பி “ நிற்பான்.

கலம் மிச்சம் ஆகுமென கற்பனையில் நம்பிடுவான்
உழக்கே மிஞ்சினாலும் சலிக்காமல் உழைத்திருப்பான்
வானம் பொய்த்தாலும் வரும் காலம் வளமாகும் - என நம்பி
விதை நெல்லை குதிருக்குள் காத்து வைப்பான்.

நீல் வானம், கார் மேகம், செங்கதிரோன், இளங்காற்று
இவை யாவும் இயற்கையினால் உழவற்கு துணையாகும் - என நம்பி
எல்லோர்க்கும் உணவளிக்க முன்னேறும் முனைப்புடனே – தை தோறும்,
பொன்னேரு பூட்டிச்செல்லும் நம் நாட்டின் உழவனிவன்
நம்பிக்கை ஒளி ஏற்றும் உழவர் புகழ் பாடி
நம் வீட்டில் வைத்திடுவோம் "நம்பிகை" தைப் பொங்கல்.

பொங்கலோ..... பொங்கல் !!! பொங்கலோ ... பொங்கல் !!!!!

ஜ. கி. ஆதி.

எழுதியவர் : ஜ. கி. ஆதி (13-Jan-14, 1:35 pm)
பார்வை : 218

மேலே