என் கவிதைப் பெண் அழகானவள்

என் கவிதைப் பெண் அழகானவள்.....

நான் படைத்த கவிதை ஒரு அழகான பெண்
கருத்தின் சாரம் கவிதையின் தலைப்பு
அதுவே அவள் தலை முளைத்த கருங்கூந்தல்
முதல் வரிகள் அவள் நெற்றிப் பொட்டு

என் கருத்தின் ப்ரதிபலிப்பு அவள் கண்கள் -
கருத்து காதலானால் பாட்டுப்பெண் கண்கள் கனிவாகும்
சமுதாய அவலங்களானால் கண்களில் பொறி பறக்கும்
துயரம் சொன்னால் கவிதைப் பெண் கண்கள் குளமாகும்
ஆன்ந்தம் பாடினால் இவள் வார்த்தை இமைகள் துடிக்கும்
வர்ணனைச் சொற்கள் இவள் மூக்கும் உதடும்

வார்த்தைகளின் கோர்வை என் கவிதை மகள் அணிகலங்கள்
நடுவில் சேர்த்த சந்தங்கள் அவள் இடையழகு
கருத்தோடு வார்த்தைகள் கைகோர்த்ததால்.. பாடல் பெண்ணின்
சுட்டு விரலைத் தொட்டுப் பிடித்த உணர்வு
வரி வரியாய் நான் எழுதித் தொடர
அவள் மெல்லிய நடை போட்டு என்னுடன் வந்தாள்.


அடிக்கடி நான் இவளை தலை முதல் கால் வரை பார்த்துப் படிப்பேன்.
மேலும் அவளை அழகுபடுத்த எழுதி எழுதி அழகு பார்ப்பேன்

ஜ. கி. ஆதி

எழுதியவர் : ஜ. கி. ஆதி (13-Jan-14, 9:55 pm)
பார்வை : 268

மேலே