மனிதனேயப் பொங்கல் வைப்போம் பொங்கல் கவிதை

மனித நேயப் பொங்கலிடுவோம் !!!!

நேர்மை அடுப்பமைத்து நெஞ்சுறுதிப் பானை இட்டு
ஒற்றுமை விரகடுக்கி மெய்யறிவுத் தீயை மூட்டி
அன்பெனும் அரிசி போட்டு காதல் பால் கலந்து
மனித நேயப் பொங்கல் வைப்போம் – மானுடம் தழைத்து ஓங்க !!!

ஏற்றத் தாழ்வகற்றி சமன்பெற்ற சமுதாயம் உறுவாக
நச்சும் கழிவுமற்ற நன்னீரும் காற்றும் வேண்டி
இயற்கை எழில்பெருகி மண்ணின் வளம் செழிக்க
பொங்கல் பண் பாடி விண்ணில் தமிழிசைப்போம்

மழையில், வெயிலில், சேற்றில், தண்ணீரில்
முக்காலும் முனைப்போடு உழவோடு வயலாடி
கதிர் விளைத்து களம் நிறப்பி உணவளிக்கும்
உழவன் திறம்போற்றி பொங்கல் இசை முழங்குவோம்.

மனித நேயம் தழைக்க முழக்கமிடுங்கள்...
பொங்கலோ !!! பொங்கல் !!!! பொங்கலோ பொங்கல் !!!!!!

ஜ.கி. ஆதி

எழுதியவர் : ஜ. கி. ஆதி (13-Jan-14, 7:28 pm)
பார்வை : 279

மேலே