விடை கொடுக்க விருப்பம் இல்லை கலாம்

விடை கொடுக்க விருப்பமில்லை கலாம் !
-------------------------
கண்கள் கலங்குகின்றதே கலாம் உன்
புகழுடல் யின்று
பூமிக்குள் புதையுண்டு போகும்
யென நினைக்கும் போது !

இந்திய ஏவுகணையின் நாயகனே
இந்த ஒரு முறையேனும்
நீ எழுந்துவர மாட்டாயா ? யெம்
இளைஞர்களை வழிநடத்த மாட்டாயா ?

மரணம் தொடும் வரை மாணவர்கள்
மத்தியிலே நின்றதேனோ அந்த
மாணவர்கள் மகிழ்சியெல்லாம்
இப்போது வெறும் கானல் தானோ ?

வல்லரசான இந்தியா இன்னும்
நல்லரசாக வேண்டுமே
அதற்கு உன் உரை தூண்டுமே ?

ஆயிரம் கலாம்களை நீ விதைத்து விட்டதால்
காலன் உன் உயிரை பறித்து விட்டானோ !
விண்வெளி சோதனை போதுமென்று
மண் உலக சோதனைக்கு விரைந்தாயோ ?
ஆனாலும் உனக்கு
விடை கொடுக்க விருப்பமில்லை காலாம்
கண்கள் குளமாக காத்திருப்பேன்
கலாமுக்காக
நீ விதைத்த கலாம்களுக்காக !

எழுதியவர் : (30-Jul-15, 7:59 am)
சேர்த்தது : m arun
பார்வை : 63

மேலே