கடல் அலையே அமைதியாகு

--------------------------------
நீலக்கடலில் பிறந்த அலையே !
கரை நெறுங்கும் போது மட்டும் நீ
கடும் கோபம் கொண்டு
சீறி எழுகின்றாய் பின்
அப்படியே கரைந்து
கடலுக்குள் சென்று விடுகின்றாய் யேன் ?
யார் மீது கோவம் உனக்கு
எவர் தேடி கரை வந்தாய்
கண்டுபிடித்தாயா இல்லையே ?
இன்னுமொறு அலையிடம்
தூதுவிட்டு விட்டு நீ
துயில் கோள்ள போய்விடுகிறாய் !
பவளபாறையும் பலவகை மீனையும்
நீ பதுக்கி வைத்தது போதாதா ?
கரை தேடி வந்து மனித
இறை தேட அழைகின்றாயோ ?
அடங்கு அலையே அடங்கு
ஆர்பரிக்காமல் அமைதியாய் வா!
படகில் செல்லும் மீனவரை
பாதுகாப்பாய் கொண்டுவா !
ஆழ்கடலில் இருந்தாலென்ன
அமைதி கடலாய் இருந்து பாரேன்
அதைவிடுத்து ஆர்ப்பரித்து
சில சமயம் சுனாமியாய் வந்து
எங்களை சுருட்டி கொண்டு !
கடலன்னை யென்றுதானே உனை
அழைக்கின்றோம்
அன்னைக்கு அவேசம் அழகா
நீயே சொல்லு
அமைதியும் சாந்தமும் தானே
அன்னையில் அழகு !
அலைக்கு மட்டும் யென்ன ?
அமைதியாகு அலையே
என் வீட்டு சிறுசுகள்
உன்னுடன் சிறிது விளையாடட்டும் !

எழுதியவர் : (23-Jul-15, 9:47 am)
சேர்த்தது : m arun
பார்வை : 56

மேலே